ராணிப்பேட்டையில் தேர்வான 21 பேருக்குறிய பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் மீனா வழங்கினார்.

 


தலைமை செயலகத்தில்  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு  தமிழக முதல்வர்  பணிநியமன ஆணைகளை வழக்கினார்


 


இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சுமார் 06.00 மணி அளவில் இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட  21 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் மீனா இ.கா. ப.,   பணிநியமன ஆணைகளை  வழங்கி அவர்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் வழங்கினார்.