20 ஆண்டுகால மின்சார பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு பொது மக்கள் மகிழ்ச்சி

 


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் மெயின் ரோடு எம்  சின்னான் நகர்  அருந்ததியர் காலனி குடியிருப்பு பகுதியிலுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் வளாகம் முழுவதும் வர்ணம் பூச வேண்டுமெனவும் 20 ஆண்டுக்கு மேலாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பை மீண்டும் வழங்குவதற்கும் தீர்வு காண வேண்டுமென இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும் திருப்பூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர் க. செல்வராஜ் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

அவரின் ஆலோசனைப்படி திருப்பூர் கருவம்பாளையம் பகுதி கழக துணைச் செயலாளர் பிஎஸ் சாந்தி பாண்டியன் குடும்பத்தார் சார்பில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு மின்சார இணைப்புக்கான பணிகளை மின்சார வாரிய தொமுச செயலாளரும் ஒப்பந்த தொழிலாளர்களின் தோழனாக விளங்கும் தம்பி EB . அ. சரவணன் அவர்கள் துரிதமாக திறம்பட பணியாற்றி பட்டத்தரசி அம்மன் கோயிலில் அனைத்து புதிய ஒயரிங் பணிகளையும் செய்து முடித்து மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டது இதற்கு  இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்