வாலாஜா அடுத்த புதுப்பட்டு கிராமம் பஜனை கோவில் தெருவில்,வசித்து வரும் சங்கர் என்பவரின் மகள் சரளா வயது 19 இவர் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் கடந்த
10 .7 .21 அன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணிக்கு தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார் இவரின் அம்மா நளினி மகள் ஏதோ செல்போனில் பார்த்து படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து வேலைக்கு சென்று வந்த களைப்பில் படுத்து உறங்கிவிட்டார்
தூக்கம் கலைந்து விழித்து பார்த்த போது செல்போன் பார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய மகளை காணவில்லை அக்கம், பக்கத்திலும் ,உற்றார், உறவினர் இடத்திலும் தேடியும் கிடைக்கவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்,புகாரை பெற்றுக் கொண்ட காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.