ஆபாச படங்களுக்கு அடிக்‌ஷன் : பள்ளிச் சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற 17 வயது சிறுவன்..!

 


செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகள் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எனினும், சிறுமி குறித்து தகவல் இல்லாததால், சதுரங்கப்பட்டினம் போலீஸில் புகார் அளித்தனர்.


இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதே கிராமப்பகுதியில் ஒதுக்குப்புறமான முட்புதரில் சிறுமியின் உடல், தலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும், சிறுமியின் தலையில் காயங்கள் இருந்ததால், யாரேனும் அடித்து கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடையதாக அதேபகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சிறுமி இறந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக்கூறி, வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி.குணசேகரன், கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்நிலையில் வழக்கில்  தொடர்புடையதாக 17 சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அச்சிறுவன் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது கத்தியதால் அவரை கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் சிறுவனிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுவனிடம் இருந்த விலை உயர்ந்த ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இந்த ஸ்மார்ட்போனில் அதிக அளவு ஆபாச பார்ன் படங்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உறவினர் ஒருவரின் பாதுகாப்புடன் வளர்ந்துவரும் இந்த சிறுவன் தொடர்ந்து பல வருடங்களாகவே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனை பயன்படுத்தி சிறுவன் தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார் அதன் விளைவாகவே இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.


முன்னதாக சம்பவம் நடந்த இடத்திற்கு செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று ஆய்வு நடத்தி இருந்தார். சிறுமியின் கொடூர மரணம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்மார்ட்போன்களை சிறுவர்களுக்கும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் அவர்கள் அதை முறையாக பயன்படுத்துகிறார்களா அல்லது வேறு ஏதேனும் தவறான வழியில் பயன்படுத்துகிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்