10 வயதுக்கு மேலான உங்கள் பிள்ளைகளுக்கான சூப்பர் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்.. எல்லா விவரங்களும் இங்கே..!

 
எல்ஐசி இன்சூரன்ஸ் மீது மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அதேபோல் போஸ்ட் ஆஃபீஸ் ஸ்கீம்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கைக்குக் காரணம் போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்புகளால் கிடைக்கும் ஆதாயம்.

போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் கணக்கு: Post Office MIS Account: 
தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்த மக்கள் MIS என்ற மாதாந்திர முதலீட்டு (Post Office Monthly Income Scheme) திட்டத்தில் அதிகளவில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர். 

இத்திட்டத்தில் மாதம் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் வட்டியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்களின் குழந்தைக்கு 10 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், அவரது பெயரில் MIS சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். 10 வயதுக்குக் குறைந்த குழந்தை என்றால் பெற்றோரின் பெயரில் திறந்து கொள்ளலாம். 

இதனை எந்த ஒரு தபால் நிலையத்திலும் திறக்கலாம். குறைந்தபட்சமாக மாதம் ரூ.1000 டெபாசிட் செய்யலாம். அதிக பட்சமாக ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்வு பெற்றுவிடும்.

ஓர் உதாரணத்துக்கு உங்கள் குழந்தைக்கு 10 வயது அவர் பெயரில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதிலிருந்து மாதம் உங்களுக்கு ரூ.1100 வட்டி கிடைக்கும். இது உங்களுக்கு ஒரு சிறு மாத வருமானம். 2 வருடங்களுக்குப் பின்னர் ரூ.2 லட்சம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

கூட்டாக கணக்கு தொடங்கலாம்:

இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து இந்தக் கணக்கை கூட்டாகத் தொடங்கலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். மூன்று பெரியவர்கள் இணைந்து ரூ.3.50 லட்சம் முதலீடு செய்து இந்தக் கணக்கைத் தொடங்கினால் இதன் மூலம் குழந்தைக்கு மாதம் ரூ.1925 கிடைக்கும். அதேவேளையில் அதிகபட்சத் தொகையான ரூ.4.5 லட்சத்தை மூதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.2475 கிடைக்கும். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். 

ஒருவேளை என்னிடம் நிறைய பணம் இருக்கிறது அதை முதலீடு செய்வேன் என்று நீங்கள் அதிகபட்ச வரம்பைத் தாண்டியும் டெபாசிட் செய்தால் அதற்கான வட்டி லாபம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.சிங்கிள் அக்கவுண்ட்டில் குறைந்தது ரூ.4.5 லட்சம் முதலீடு செய்து 6.6 சதவீத வட்டியில், மொத்தம் ரூ.29,700 வட்டி வருமானம் பெறலாம்.  ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் அதிகபட்சமாக முதலீடு செய்தால் 6.6 சதவீத வட்டி வருமானத்தில் ரூ.59,400 வருமானம் கிடைக்கும்.

கணக்கைத் தொடங்குவது எப்படி?

MIS என்ற மாதாந்திர முதலீட்டு திட்டத்தில் (Post Office Monthly Income Scheme) இணைய விரும்புவோர் தங்களின் அடையாள ஆவணம், முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 2 இரண்டு ஆகியனவற்றுடன் 1,000 ரூபாய் செலுத்தி அருகிலுள்ள அஞ்சலகத்தில் கணக்கைத் திறக்கலாம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)