தப்ப முயற்சித்த சிவசங்கர் பாபா .. CBCID போலிஸ் அதிரடி ‘ஆக்ஷன்’ - சிக்கியது எப்படி?

 சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நெஷ்னல் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் பலர் சமூக வலைதளத்தில் பலர் பள்ளியின் நிறுவனர் சிவாசங்கர் பாபாவின் மீது பாலியல் புகார்கள் தெரிவித்து பல தகவல் வெளிந்த வந்தன.

இந்த புகார் தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பாலியல் தொடர்பாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் போக்சோ உட்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வங்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தாமாக முன் வந்து பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவையும் கடந்த 11ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக சமன் அனுப்பட்டது. மேலும், சமன் அனுப்பட்ட நிலையில் பள்ளியின் நிர்வாகிகள் ஆணையத்தில் ஆஜர் ஆன நிலையில் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா நேரில் ஆஜர் ஆகவில்லை.

மொட்டையடித்து தப்ப முயற்சித்த சிவசங்கர் பாபா .. CBCID போலிஸ்  அதிரடி ‘ஆக்ஷன்’ - சிக்கியது எப்படி?

அதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவின் சார்பில் அவர் உடல் நிலை கோளறு காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருதனர். போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை கடந்த 13ம் தேதி சென்னை சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் திர்பாதி உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலையிலான சென்னை சிபிசிஐடி போலிஸார் விசாரணை தொடங்கினர். விசாரணையின் போது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல்வேறு ஆதரங்கள் கிடைத்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிவசங்கர் பாபாவை கைது செய்ய முடிவு செய்து உத்தரகண்ட் மாநிலத்திற்கு டி.எஸ்.பி குணவர்மன் தலைமையிலான சென்னை சி.பி.சி.ஐ.டி போலிஸார் விரைந்தனர்.

அதனை தொடர்ந்து சென்னை சிபிசிஐடி போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிவசங்கர் பாபாவிற்கு பாரதி மற்றும் தீபா ஆகிய 2 ஆசிரியைகள் உதவி செய்தது தெரியவந்தது. சிபிசிஐடி போலிஸார் விசாரணையை தொடர்ந்து 2 ஆசிரியைகள் மீது போக்சோ சட்டம் உட்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பி செல்லமால் இருக்க லுக் அவுட் நோட்டிஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பட்டது.

மொட்டையடித்து தப்ப முயற்சித்த சிவசங்கர் பாபா .. CBCID போலிஸ்  அதிரடி ‘ஆக்ஷன்’ - சிக்கியது எப்படி?

ஆனால், அதற்குள் தகவலறிந்து சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பி டெல்லி சென்றுள்ளார். அதன்பின்னர், சிவசங்கர் பாபாவுடன் இருந்த உதவியாளரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர தெடுதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் டெல்லி சித்தரஞ்சன் பூங்கா பகுதியில் பதுங்கி இருப்பதாக சென்னை சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதியில் மொட்டை அடித்து மாறுவேடத்தில் இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலிஸார் உதவியுடன் சென்னை சிபிசிஐடி போலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி 2 நாள் ட்ரான்ஸ்ட் வாரண்ட் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

அதே சமயத்தில் சிவசங்கர் பாபாவை டெல்லி போலிஸார் உதவியுடன் சென்னை சிபிசிஐடி போலிஸார் கைது செய்த நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹாரி இண்டர்நெஷ்னல் பள்ளியில் சென்னை டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான மற்றொரு தனிப்படை போலிஸார் சோதனை மேற்கொண்டனார். இந்த சோதனையில் சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து 4 லேப்டாப் மற்றும் 2 கணினிகளையும் சிபிசிஐடி போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் நேற்று இரவு டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை சிபிசிஐடி போலீசாரால் விமான மார்க்கமாக சென்னை விமான நிலையம் அழைத்துவந்தனர்.

மொட்டையடித்து தப்ப முயற்சித்த சிவசங்கர் பாபா .. CBCID போலிஸ்  அதிரடி ‘ஆக்ஷன்’ - சிக்கியது எப்படி?

சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரணைக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் அமைந்துள்ள சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலிஸார் அழைத்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.


குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து சிவசங்கர் பாபா தப்பிக்க உதவி செய்து யார் ?, அவர் எப்படி உத்தரகண்டில் இருந்து டெல்லி வந்தார். டெல்லியில் அவருக்கு உதவியது யார் என்ற கோணத்தில் இரவு முழுவதும் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான சிபிசிஐடி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சிவசங்கர் பாபாவிற்கு உதவி செய்த 2 ஆசிரியைகளிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் சிபிசிஐடி போலிஸார் தெரிவிக்கின்றனர். சென்னை சிபிசிஐடி போலிஸார் லுக் ஆவுட் நோட்டிஸ் அனுப்பி நிலையில், வெளிநாடு தப்பி செல்ல போலி பாஸ்போர்ட் பயன்படுத்த முயற்சி செய்ததாகவும் டெல்லி போலிஸார் தரப்பில் தகவல் வெளிவந்த வண்ணமாக உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நாளை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சிபிசிஐடி போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.