அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக திறமையின்மையின் அவலம்: CAG அறிக்கை மூலம் அம்பலம்! - அதிர்ச்சி ரிப்போர்ட்

 


அதிமுக ஆட்சியில் ஊழல் மோசடி. நிதி நிர்வாக திறமையின்மையால் பல ஆயிரம் கோடி நஷ்டம் என 2018, 2019, 2020 ஆண்டிற்கான இந்திய தணிக்கை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிதம்பரம் ஜெயங்கொண்டான் மற்றும் கொடைக்கானல் நகராட்சிகளில் கடந்த 2018 -20 ஆம் ஆண்டுகளில் வாங்கிய திடக்கழிவுகளை பயன்படுத்துவதற்காக வாங்கிய இயந்திரங்களை பயன்படுத்த தவறியதன் விளைவாக 3.95 கோடி ரூபாய் செலவும் பயனற்றதாக ஆனதாக தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாட நூல்கள் கழகத்தின் தொகை கோரிக்கையை சரிபார்க்க பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்கங்கள் தவறியதால் ரூ 23 .27 கோடி தவிர்க்கக்கூடிய செலவாக ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ மருந்துகளில் தேவையை தெரிவிப்பதற்கு உரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இ எஸ் ஐ தவறியதால் தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்ட மருந்துகளால் அரசு பணம் 16.49 கோடி நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்வி இயக்குனரகம் முறையற்ற வகையில் திட்டமிட்டது மற்றும் கட்டடம் குறித்த தேவையை மதிப்பிட தவறியது ஆகியவற்றின் விளைவாக ரூ55 .33 கோடி செலவில் அடிப்படை கட்டுமானம் முடிவுற்ற மூன்று அடுக்கு மாடி கட்டிடங்கள் பயனற்று இருந்தது இருக்கின்றன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)