பெண் குளிப்பதை வீடியோவாகபடம்பிடித்து, டார்ச்சர் செய்த கணவர்.. போலீஸில் சொல்லி கம்பி எண்ண விட்ட மனைவி

 


கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்த 40 வயது நபர் தன் மனைவியை சந்தேகத்தின் பேரில் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் அந்தப்பெண் குளிப்பதை வீடியோவாக எடுத்துள்ளார் இதுகுறித்து கணவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புனேவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவர் சந்தேகத்தின் பேரில் கொடுமைப்படுத்துவதாக தேகு ரோடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளியான நிலையில் பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தேகு ரோடு காவல்நிலைய காவலர்கள், “ 35 வயதுமதிக்கத்தக்க அந்த பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்தார். காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து சென்றார். இதனையடுத்து அந்த தம்பதியை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டோம். சந்தேகத்தின் காரணமாக என் கணவர் என்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் உடல் ரீதியிலாக கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார். இதுகுறித்து அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டோம்.

மேலும் அந்தப்பெண் கூறுகையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இன்னைக்கு யாருக்கூட பேசுன. யாருக்கூட நடந்து வந்த என்று கேள்வி கேட்பார். அவரது பேச்சுக்கு பதிலளிக்கவில்லை என்றால் கொடுமைப்படுத்துவார் என்றார். இதனையடுத்து பெண் காவலர்கள் அந்த நபரின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்தனர். கால் ஹிஸ்ட்ரி, மெசேஜ்களை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மனைவி குளிப்பதை வீடியோவாக எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், என்னுடைய மனைவி பணிக்கு சென்றுவிட்டால் நான் அவரை மிகவும் மிஸ் செய்வேன். எனவே தான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என்றார். ஊரடங்கு காரணமாக அந்த நபருக்கு வேலை பறிபோயுள்ளது. அதன்பின் அவருக்கு சரியான வேலையும் கிடைக்கவில்லை. இதன்காரணமாக தனது மனைவியை டார்ச்சர் செய்யத் தொடங்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் இவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை. வேலைக்கு செல்லும்போது தன்னுடைய பணியில் மிகவும் பிஸியாக இருந்துள்ளார்.வேலையிழந்த பின்னர் தன்னுடைய மனைவியை டார்ச்சர் செய்யத் தொடங்கியுள்ளார். மனைவியை தவறாக வீடியோ எடுத்ததற்காக அவரை கைது செய்துள்ளோம்” என்றனர்.