காய்கறிக்கு பணம் தர முடியாது.. மிரட்டல் விடுத்த குடிகார நகராட்சி ஊழியர்...
மருதமலை திரைப்படத்தில் நடிகர் வடிவேலு லஞ்சம் வாங்கும் பாணியில் ஆரணியில் நகராட்சி ஊழியர் ஒருவர் அடையாள அட்டையை காண்பித்து,
மிரட்டி இலவசமாக காய்கறி வாங்கிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஊரடங்கு காரணமாக ஆரணியில் மார்கெட் மூடப்பட்டதையடுத்து
தாஸ் என்பவர் சாலையோரமாக காய்கறி கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்த ஆரணி நகராட்சி மேற்பார்வையாளர் வாசு என்பவர்,
மதுபோதையில் தனக்கு வேண்டிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு,
பணம் கேட்ட கடைக்காரரை தகாத வார்த்தையில் பேசி சென்றதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, அந்த நகராட்சி ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.