மதுபான கடைகளை கடைகளை திறக்க முடிவெடுத்தது ஏன் - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்


 கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா‌.சுப்ரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இணைந்து ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா‌சுப்ரமணியன், தமிழகத்திற்கு இதுவரை 1.6 கோடிதடுப்பூசிகள் வந்துள்ளதாவும் அதில் 98 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இன்று காலை 1.26 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் மேலும் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்று வரை தமிழகத்தில் 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளதாகவும் இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த பணி தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னை மாநகராட்சியில் மட்டும் தடுப்பூசியால் 21,63,213 பேர் பயன் அடைந்துள்ளதாகவும், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றுவரையில் 9,655 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இடமாகக் கோயம்பேடு மாறும் என்றும் மா‌.சுப்ரமணியன் கூறினார்.

நேற்று வரை 2,500 தடுப்பூசிகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றைய தினம் தொடங்கி 100-கும் மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த மா‌.சுப்ரமணியன், சென்னையில் மட்டும் 5000 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சரின் டெல்லி பயணித்தின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைப்பார் என்றும் அப்போது தெரிவித்தார்.

மதுபான கடைகள் திறப்பு குறித்த கேள்விக்கு, தற்போது தொற்றின் உச்சம் குறைந்து வருகிறது அதை கருத்தில்க்கொண்டே மாநில வருவாய் துறை மதுபான கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தேநீர் கடைகள் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், கூறினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ‌மா‌.சுப்ரமணியன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னையில் 10-25 பேர் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 21 ஆக குறைந்துள்ளதாகவும், 6-10 பேர் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதி 24 ஆக குறைந்துள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் கோயம்பேடு வணிக வளாகத்தில் 9,003 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது 16 பேர் மட்டுமே தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் இதுவரை 3,646 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதியானது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 33,618 தெருக்களில் தொற்று பாதிப்புகள் ஏதும் இல்லை. 5% மத்திய அரசு அறிவித்தபடி 5 சதவீதம் குறைவாகவே தொற்று உள்ளது என்று கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்