பிறந்தநாள், திருமணநாளன்று விடுமுறை - மாவட்ட எஸ்.பி., அறிவிப்பு!

 


திருவாரூரில் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பிறந்தநாள் மற்றும் திருமணநாளன்று விடுமுறை அளித்து மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக கருதப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரின் பங்களிப்பு அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.


முன்களப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அவர்களுக்கும் பல்வேறு மனரீதியான உளைச்சல்கள் மற்றும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படும் காவல்துறையினரின் பங்களிப்பும், பொதுமக்களுக்கு அளித்து வரும் பாதுகாப்பும் பெரும் பணியாக கருதப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக கருதப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரின் பங்களிப்பு அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

முன்களப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அவர்களுக்கும் பல்வேறு மனரீதியான உளைச்சல்கள் மற்றும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படும் காவல்துறையினரின் பங்களிப்பும், பொதுமக்களுக்கு அளித்து வரும் பாதுகாப்பும் பெரும் பணியாக கருதப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலகட்டத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அதனை தடுக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறையினரும் சிறந்த முறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கடந்த 7-ம் தேதி அன்று சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். எஸ்.பி உத்தரவின்பேரில் காவல்துறையில் தினசரி காலை 7 மணிக்கு நடைபெறும் அணிவகுப்பில் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை படிக்கப்படுகிறது.

மேலும் காவல்துறை மக்களுக்கான சேவை என்ற உணர்வை ஒவ்வொரு காவலருக்கும் உணர்த்தும் விதமாக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பொன்மொழிகளான காவல்துறையினர் மக்களின் சேவகர்கள், எஜமானர்கள் அல்ல., காவலர்கள் சீர்திருத்தவாதிகள் என்ற வாசகம் இரண்டுமுறை படிக்கப்படுகிறது.

மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பிறந்தநாள், திருமணநாள் மற்றும் அவர்களது கணவர் அல்லது மனைவியின் பிறந்தநாள் என்றால் அன்று அவர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடும் காவல் துறையினர்களுக்கு வாழ்த்துமடல் அளித்து அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து வாழ்த்து செய்தியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பணி நிமித்தமாகவோ சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத செயல்களான லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் மற்றும் சாராய விற்பனை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்களிடமும் எனது எல்லையில் சட்டவிரோத செயல்கள் இல்லை என சான்று பெறப்பட்டுள்ளது. 

மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களையும், ரவுடிகளையும் களை எடுக்க தனித்தனியாக தனிப்படை அமைத்து எஸ்.பி., நேரடிப் பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு திருமணநாள் பிறந்தநாளன்று விடுமுறை அளித்து தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட அனுமதி அளித்துள்ள காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு பல்வேறு காவல்துறையினரும் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதால் மன உளைச்சல் குறையும் என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்