மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 




சென்னையில் இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சமூகவலைத்தளத்தில் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அப்பள்ளியில் பயின்ற போது ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது
இந்த புகாரை பெற்றுக்கொண்ட கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆனந்தனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் செய்முறை மதிப்பெண்களை வைத்து மாணவிகளை மிரட்டி அவர்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

போலீசார் விசாரணையில், பதினொன்றாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவிகளுக்கு வணிகவியல் பாடத்தை எடுத்து வரும் ஆசிரியர் ஆனந்தன் அந்த பாடத்திற்கான செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து, மாணவிகளை மிரட்டி வந்துள்ளார்.

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் ஆசிரியரை எதிர்த்து கேள்வி கேட்டாலோ அல்லது பாலியல் தொந்தரவுக்கு இணங்கவில்லை என்றால் வணிகவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு மதிப்பெண்களை போட மாட்டேன் என கூறி மிரட்டி இருக்கிறார்.சில மாணவிகளிடம் செய்முறை தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாகவும் மிரட்டி பாலியல் தொந்தரவு விஷயம் வெளியே தெரியாமல் செய்து வந்திருக்கிறார் ஆசிரியர் ஆனந்தன் என தெரியவந்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)