சிறுவனை வீட்டிற்குள் வைத்து பூட்டிய போலீசார்..அருமனை காவல்துறையினர்!

 


கன்னியாகுமரி : அருமனை அருகே விசாரணைக்கு சென்ற காவல்துறையினர் 10வயது சிறுவனை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த இரும்பிலி வலியவிளை பகுதியை சேர்ந்தவர் திலக்குமார். கட்டிட தொழிலாளியான இவர்மீது சொத்துபிரச்சினை காரணமாக அருமனை காவல்நிலையத்தில் மோனிஷா என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வருமாறு திலக்குமாரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர்

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து காணப்பட்ட திலக்குமார் இன்று வேலைக்கு சென்றுள்ளார். இவரது மனைவி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது திலக்குமாரின் வீட்டிற்கு வந்த அருமனை காவல்துறையினர் வீட்டில் திலக்குமார் இல்லாததால் வீட்டை பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்றுள்ளனர் .

இதற்கிடையே வீட்டில் குளித்துக்கொண்டிருந்த திலக்குமாரின் 10 வயது மகன் டிவைன் வெளியேவந்து பார்த்தபோது வீடு பூட்டப்படிருப்பது கண்டு அழத் துவங்கியுள்ளார். இந்நிலையில் வெளியே சென்றிருந்த திலக்குமாரின் மனைவி சுஜா வந்து பார்த்த போது வீடு பூட்டப்பட்டு தனது மகன் உள்ளே அழது கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்

இது குறித்து அருமனை காவல்நிலைய அதிகாரிகளிடம் தொலைபேசிவாயிலாக முறையிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அருமனை காவல்துறையினர் வீட்டை திறந்து சிறுவனை வெளியேற்றினர்.

இது குறித்து சுஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், சொத்துபிரச்சினைக்காக கூலி வேலை செய்யும் தன் கணவனை விசாரணைக்கு வருமாறு காவல்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் ஊரடங்கிற்கு பிறகு இன்று தான் கணவனுக்கு வேலை இருந்ததாகவும் மாலையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்வதாகவும் கூறியிருந்த நிலையில் தாங்கள் வீட்டிலில்லாத நேரத்தில் அருமனை காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து தனது 10 வயது மகனை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றனர். இதனால் பயந்து போய் தனது மகன் அழதுள்ளான். ஆகையால் தனது மகனை வீட்டில் வைத்து பூட்டி சென்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)