மீண்டும் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்

 


தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 18,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31045 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 409 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று கொரோனாவால் 351 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,74,704  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 31,045 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,28,344 ஆக உள்ளது.

கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று 351 உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயிரிழப்பு 400-ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 409 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 27,765  ஆக அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 2439 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1437 பேருக்கு கொரோனா தொற்றும், 42 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு