திருப்பூர் அருகே மாட்டு இறைச்சி வெட்டக்கூடாது என தாசில்தார் மிரட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

 

https://fb.watch/6p1P0I_-gO/


இலட்சத்தீவு, உத்தர பிரதேசத்தில் நடப்பதை போன்ற அடக்குமுறை தற்போது தமிழகத்திலும் தலை தூக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 
கசாப் கடை உரிமையாளரை மாட்டு கறி வெட்டக்கூடாது என்று தாசில்தார் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாட்டு கறி சாப்பிடவும், அறுத்து விற்பனை செய்யவும் தடை எதுவும் கிடையாது. இந்த நிலையில்,

அவிநாசி பகுதியில் மாடுகளை வதை செய்வதாக புகார் வந்ததாக கூறி கசாப் கடை காரரை நேரில் வந்து தாசில்தார் மிரட்டியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்கு உத்தரவிட பட்டுள்ளது என்றும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலட்சத்தீவுக்கான நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் பொறுப்பேற்றதிலிருந்து முழு அடிப்படைவாதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மக்களை அடக்கி ஆளுகிற கொடுங்கோன்மையாளராகவும் இருக்கிறார் என்ற விமர்சனங்கள் சூடு பிடிக்க தொடங்கியது.

அரசு நிர்வாகம் கடுமையான அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்குவதாகவும் கடும் குற்றசாட்டுகள் எழுந்தது. குறிப்பாக, இலட்சத்தீவு பகுதியில் மாட்டிறைச்சி உண்ணவும் தடை விதிக்கப்பட்டது. பொதுவாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ ஆட்சி நடைபெற்று வருவதாக இடதுசாரி கட்சிகளிடையே பேசப்படுகிறது.

அதிலும் மாடு மற்றும் அதன் இறைச்சியை வைத்து பெரிய அரசியலே நடந்து வருகிறது. ஜனநாயக நாட்டில் மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதையும் ஆட்சியாளர்கள் தீர்மானிப்பதாலேயே பாஜக மீது வெறுப்பு அம்புகள் வீசப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)