புதுச்சேரி: எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தையே அடித்து நொறுக்கிய பா.ஜ.க தொண்டர்கள் !

 


புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போன்று அவரது மகனும் நெல்லிதோப்பு தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அவரும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ.கவில் உள்ளனர்.

இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சிறுபான்மை பிரிவை சேர்ந்த அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மாற்று நபருக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

இதனால் காமராஜ் நகர் தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம் முன்பு குவிந்து ஜான் குமார் அவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது பதாகையை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.

புதுச்சேரி: எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தையே அடித்து நொறுக்கிய பா.ஜ.க தொண்டர்கள் !

இதனிடையே திடீரென அலுவலக முன்புள்ள ஷட்டரை உடைத்து பா.ஜ.க தலைமை அலுவலக பேனரை கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் அவர்களை சமாதானப்படுத்தி இது குறித்து மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து ஒரு மணி நேரமாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நெல்லித்தொப்பு சிக்னலில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியனர்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் பா.ஜ.க அலுவலகத்தை சூறையாடியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது ரெட்டியார்பாளையம் போலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்