இ-பதிவுக்கும், இ-பாஸூக்கும் வித்தியாசம் என்ன?

 


கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவலின் அடிப்படையில் சுகாதார வல்லுநர்களின் பரிந்துரையின் பேரில் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளை (ஜூன் 21) காலை 6 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கை ஜூன் 28ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. தொற்று பாதிப்பில் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘வகை 1’ மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகள் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை 2 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸி, ஆட்டோக்களில் இ-பதிவு பெற்றும், வகை 3 மாவட்டங்களில் இ-பதிவு இல்லாமல் பயணிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ‘வகை 3’ என பட்டியலிடப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..

இ பாஸ் (E PASS) அவசியம்

இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற்ற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

இ - பதிவு (E REGISTRATION) தேவைப்படும் மாவட்டங்கள்

இதே போல ’வகை 2’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிக்கள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இ-பதிவுக்கும், இ-பாஸூக்கும் வித்தியாசம் என்ன?

இ-பாஸ் முறை என்பது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்பதை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள். தேவையற்ற காரணமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!