காரில் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் : போலீசாரைக் கண்டதும் தப்பியோட்டம்!!

 


ஈரோடு : சத்தியமங்கலம் அருகே 1171 மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் ஓட்நரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரும் மதுபாட்டில்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை வழக்கம் போல பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை சோதனையிட்ட போது‌ கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.


உடனடியாக அவர்களை பிடித்த சத்தியமங்கலம் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கண்ட போது காரில் வந்தவர் கோபிசெட்டிபாளையம் முன்னாள் அரசு வழக்குரைஞர் பரமேஸ்வரன் (வயது 51), என்பதும் வாகனத்தை ஓட்டி வந்தவர் சிறுவலூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பதும் தெரியவந்தது.

காவல்துறையினர் பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்தி விசாரிக்க காரில் இருந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாக சத்தியமங்கலம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் கடத்தி வந்த 1171 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தலைமறைவான முன்னாள் அரசு வழக்குரைஞர் பரமேஸ்வரனை தேடி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)