மாட்டிறைச்சி விற்கக் கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.


 திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி. அண்மையில் இவரது இறைச்சி கடைக்கு இரவு நேரத்தில் சென்ற வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மாட்டிறைச்சி விற்க கூடாது என வேலுச்சாமியை எச்சரித்தார். அனைவரும் இறைச்சி விற்பனை செய்வதை நிறுத்தினால் தானும் நிறுத்துவதாக வேலுச்சாமி கூற, சட்டம் தெரியாமல் இங்கு வந்து பேசவில்லை, மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என கண்டிப்புடன் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் வட்டாட்சியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்த உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர். இந்த நிலையில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளிக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)