கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்களையும் பிரதீப் இன்ஜினியரிங் தொழிற்சாலையின் சார்பாக வழங்கப்பட்டது
திருவலம் அடுத்த ஆரியமுத்துர் மோட்டூர்  பகுதியில் வசித்து வரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த   கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவுடன்  அரிசி மற்றும் மளிகை பொருட்களையும் பிரதீப் இன்ஜினியரிங் தொழிற்சாலையின் சார்பாக அதின்  உரிமையாளர்  நல்லசாமி   வழங்கினார் 


ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து   கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

 வறுமையில் தவித்து வருவதாக சமூக ஆர்வலர்களின் மூலமாக பிரதீப் இன்ஜினியரிங் தொழிற்சாலை உரிமையாளரான சமூக சேவகர் நல்லசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது


 தகவலைத் தொடர்ந்து தொழிலதிபரும் சமூக சேவகருமான நல்லசாமி  உடனடியாக கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று மதிய உணவுடன், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார் 


தொழில் அதிபரும் சமூக சேவகருமான நல்லசாமி மதிய உணவுடன், நல திட்ட உதவிகள்  பெற்றுக்கொள்ள வருகை தந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு விதிமுறைக்கு உட்பட்டு சமூக இடைவெளிகளுடன் முகக் கவசங்கள் அணிந்து மதிய உணவுடன் உதவிகளைப் பெற்று சென்றனர் .


வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கிய தொழிலதிபரும் சமூக சேவகருமான நல்லசாமியின் செயலினை கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல தரப்பு பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்த நலத்திட்ட உதவி மற்றும் உணவு  வழங்கும் நிகழ்ச்சியில் திருவலம் பகுதியை சார்ந்த  சமூக ஆர்வலர் தீனா உட்பட பலர் பங்கேற்று இருந்தனர்.