ஒரு ரயில் பெட்டி கூட கொரோனா வார்டாக தமிழகத்தில் பயன்படுத்தப்படவில்லை - ஆர்டிஐ தகவல்


 தமிழ்நாட்டில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ஒரு ரயில் பெட்டி கூட பயன்படுத்தப்படவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் ஏராளமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகினர். பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சார்பில் 573 ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. ஒரு பெட்டிக்கு 51 ஆயிரத்து 388 ரூபாய் செலவு செய்யப்பட்டு, மொத்தம் இரண்டு கோடியே 94 லட்ச ரூபாய் மதிப்பில், ரயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சியில் இந்த பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த கோட்வின், தமிழ்நாட்டில் எத்தனை ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக பயன்படுத்தப்பட்டது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, ஒரு ரயில் பெட்டி கூட பயன்படுத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை பயன்படுத்துவதற்கான தேவை எழவில்லை என்றும் ரயில்வே சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரயில் பெட்டிகளை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ரயில் பெட்டிகளை பயன்படுத்த முடியாது என்றும், இந்த வார்டுகள் ரயில் நிலையங்களில் மட்டுமே இருக்கும் என்பதால், சுகாதார பணியாளர்கள் அங்கு சென்ற சிகிச்சை அளிப்பதில் சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது
.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)