ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாகதிருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உதவி

 
மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக புதன்கிழமை (02/01/2021) கொரானா இரண்டாம் அலையால் மதுரையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடனும், கலெக்டர் அவர்களின் அனுமதியுடனும் 4 இடங்களில் (s s காலணி, செல்லூர், பீ பீ குளம், மதிச்சியம் )சமூக இடைவெளியை பின்பற்றியும் வழங்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி அவர்களும், திரு. மணிக்குமார் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினர்.அதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்