இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பியுங்கள்..

 


இலவச தையல் இயந்திரம் வேண்டும் பெண் விண்ணப்பதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன் சென்னை மாவட்ட சமூக நல அலவலகத்தில் 25-06-2021 அன்று மாலை 5.45க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் சமூக நலத் துறை வாயிலாகச் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாகத் தமிழக அரசால் இலவசமாகத் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த தையல் இயந்திரத்தைப் பெற தற்போது சென்னை மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ் 2021 -2022ம் நிதியாண்டிற்கு ’சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வேண்டும் பெண் விண்ணப்பதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன் சென்னை மாவட்ட சமூக நல அலவலகத்தில் 25-06-2021 அன்று மாலை 5.45க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. வருமானச் சான்று ரூ. 72000/- குள் இருத்தல் வேண்டும்.
2. பிறந்த தேதிக்கான வயது சான்று (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்)
3. விதவையாக இருப்பவராயின் அதற்கான சான்று ( ஆதரவற்ற விதவை சான்று வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
4. சாதி சான்று
5. கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று ( வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
6. தையல் தெரியும் என்பதற்கான சான்று ( 6 மாதம் பயிற்சி முடித்திருக்க வேண்டும் )
7. குடும்ப அட்டை
8. ஆதார் கார்டு
விண்ணப்பிப்போர் மேற்கூறிய சான்றுகளின் நகல்களுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட சமூக நல அலுவலகம்,
சிங்காரவேலர் மாளிகை,
எட்டாவது தளம், இராஜாஜி சாலை,
சென்னை-01

இவ்வாறு அந்த செய்தி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.