பாஜக சிவகங்கை மாவட்டத் தலைவர், நகர, ஒன்றிய தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் ராஜினாமா!

 


எச்.ராஜா கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை நாடாளுமன்ற  தொகுதியில் பாஜக சார்பில்  போட்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில்  பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜா மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிலர் தேர்தலில் வேலை செய்யவில்லை என்றும் மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த பணத்தை முறையாக பட்டுவாடா செய்யாததால் தான் தனது தோல்விக்கு காரணம் என எச்.ராஜா பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பாஜக  காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் பிரபு  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர்.

காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் தனது ராஜினாமா கடித்தத்தில் கூறியதாவது, எச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயமலும், சுயபரிசோனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்,’’ என தெரிவித்துள்ளார். மேலும் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலவும் இதே கருத்தை வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.


பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது கட்சி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ‘‘நான் ராஜினாமா செய்தது உண்மை தான். இன்னும் ஓரிரு நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து உண்மையை கூறுகிறேன். 

மேலும் தேவகோட்டை, காரைக்குடி நகர நிர்வாகிகள், கண்ணங்குடி, சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர் என்றார் .

செய்தியாளர் - முத்துராமலிங்கம்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்