ஓபிஎஸ் தங்கியிருந்த தனியார் ஓட்டலுக்கு நேரில் சென்று அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார் இபிஎஸ்

 


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் நீடித்த சந்திப்பின் போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகியான பாலகங்கா மட்டும் உடனிருந்தனர்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருக்கும் அதிமுக செயலாளர்கள் ஒன்பது பேருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தனக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கருத்து வேறுபாடு ஏதும் இல்லையென கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய புதிய வீட்டு கிரஹபிரசேவத்திற்காக சென்றதால் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)