பண மோசடி புகார் தொடர்பாக எச்.ராஜா மீதானகாரைக்குடியில் விசாரணை...

 


2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தேர்தலைச் சந்தித்தது. இக்கூட்டணியில் பா.ஜ.கவிற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது. பா.ஜ.க சார்பில் எல்.முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உட்பட 20 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். குறிப்பாக காரைக்குடி தொகுதியில் பா.ஜ.கவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டார்.  தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு பா.ஜ.க வேட்பாளர்களுக்கும் கட்சியின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளச் செய்வார்கள்.

அந்த அடிப்படையில் எச்.ராஜாவுக்கு 4 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும், வழங்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கு எச்.ராஜா காரைக்குடியில் கட்டிவரும் வீட்டிற்கு முழுமையாக செலவழித்துவிட்டதாகவும் காரைக்குடியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் ஏராளமானோர் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரிக்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின்  அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், காரைக்குடி மாவட்டத்திற்கு நேரடியாக சென்று இன்று காலையில் விசாரணையை தொடங்கினர். கட்சி நிர்வாகிகளிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்திய அவர் பொய்யான குற்றச்சாட்டுகள் இருந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால் தாங்கள் சொல்லும் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் உள்ளதாகவும் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கக் கூடிய வாய்ப்பை அலட்சியமாக எடுத்துக் கொண்டதால் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த போதிலும் பா.ஜ.க தோல்வி அடைந்து விட்டதாகவும் காரைக்குடி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல்வேறு ஆதாரங்களுடன் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளையில் இந்தக் கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்கவில்லை என்பதால் அவர் தரப்பு விளக்கமும் விரைவில் பெற்று அதன் பிறகு விசாரணை குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் பாஜக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)