கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது


ஆற்காடு வட்டம் அரும்பாக்கம் கிராமம் ஆதிதிராவி டர் காலனி  பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் குப்பன் மகன் விஜயசாரதி வயது 39 என்பவர் லாரி ஓட்டுனராக பணி செய்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளிசாலை  தெருவில் வசித்து வரும் லேட் ஜெயபாலின் மகன் பிரபு  என்கிற பிரபாகரன் வயது 34 என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார் இவர் அந்த கிராமத்தில் தன்னை ஒரு ரவுடி போல பாவித்து, யாரை வேண்டுமானாலும் வீண் வம்பு செய்து ,சண்டை இழுப்பது,கரடுமுரடான வார்த்தைகளைப் பேசுவது, வீடுகளுக்குள் புகுந்து அடிப்பது, கத்தியைக் கொண்டு மிரட்டுவது,பக்கத்து கிராமங்களுக்கு சென்று வீண் சண்டை வலிப்பது எண்ணற்ற செயல்களை செய்து  ஒரு குட்டித் தாதாவை போல செயல்பட்டு வந்திருக்கிறார்.


இந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக இவருக்கும் விஜயசாரதி மாணவி அஞ்சலிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.


 இவர்களின் கள்ளக்காதல் அஞ்சலி கணவர் விஜயசாரதிக்கு தெரியவர, பிரபு என்கிற பிரபாகரனுக்கும் விஜய் சாரதிக்கும் தகராறு ஏற்பட்டு இவர்கள் இருவர் மீதான வழக்கு கலவை காவல்நிலையத்தில்  நிலுவையில் உள்ளது இந்த நிலையில் நேற்றைய

 முன்தினம் விஜயசாரதி லாரி ஓட்டுனர் வேலைக்கு சென்று தன் சொந்த ஊரான கிராமத்துக்கு வந்தார் வீட்டிற்குப் போகும் முன்னே   கெங்கையம்மன் கோயில் அருகில் அந்த கிராமத்து வாலிபர்கள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்

அதில் பிரபு என்கிற பிரபாகரனும் விளையாடிக் கொண்டிருந்தார் இதனை நின்று விஜயசாரதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் பிரபு விஜயசாரதியை பார்த்தவுடன் எழுந்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு சென்று வீட்டில்லுள்ள கத்தியை வாகனத்தில் எடுத்து  வைத்துக்கொண்டு தாய விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 

விஜயசாரதியின் பின்புறத்தில் வந்து கொலைவெறி தாக்குதலோடு கத்தியால் வலது தோள்பட்டையிலும்,வலது கை மணிக்கட்டிலும் சராமரியாக வெட்டியுள்ளார் இந்த சம்பவத்தை பார்த்து அங்குள்ள வாலிபர்கள் ஓடி வந்து

பிரபுவை  தடுத்து நிறுத்தியதால் விஜயசாரதி உயிர் தப்பி இருக்கிறார்.


 வெட்டு காயம் பட்ட விஜயசாரதியை அங்கு உள்ள வாலிபர்கள் பெரியோர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் விஜயசாரதி சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து புகாரை பெற்றுக் கொண்ட கலவை காவல்துறையினர்  வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தியையும் இரண்டு சக்கர வாகனத்தையும் 

கைபற்றி  வழக்கு பதிவு செய்து பிரபு என்கிற பிரபாகரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.