அகில இந்திய இந்து மகா சபா திண்டுக்கல் மாவட்டம் சார்பில் பெரியகோட்டை பாரப்பட்டியில் மின்சார வசதி.அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ அவர்களின் உத்தரவின் பேரில்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளால் குக்கிராம மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தரபட்டது..

திண்டுக்கல் மாவட்டம் பெரியக்கோட்டை பாரப்பட்டி என்னும் குக்கிராமத்தில் ஏழு குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. கடந்த 30வருடங்களாக அந்த குடும்பத்தாருக்கு மின்சார வசதி இல்லாமல் இருந்து வந்தது. 

இதனை அறிந்த அகில இந்திய இந்து மகாசபாவின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளான 

நாகலட்சுமி ஜி தேசிய அமைப்பு செயலாளர்ராஜ்குமார் ஜிமாவட்ட செயலாளர்மற்றும் சுமதி அவர்களுடன் மாவட்ட நிர்வாகிகள்

ஆகியோரின் கூட்டு முயற்சியால் சோலார் முறையில் அந்த கிராம மக்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தி தந்தனர்.

மேலும் அந்த ஊரில் கோவில்களே இல்லாத நிலையில்

கோவில்கள் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்பதால் அரசமரமும் வேப்ப மரமும் இணைத்து நட்டு வைத்து அதன் கூடவே ஒரு விநாயகர் சிலையும் வைத்து வழிபாடு செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்தனர்.