ஆடு மேய்ப்பவரிடம் நூதன மோசடி -கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து கும்பல் கைது!

 


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி ஆடு மேய்ப்பவர். அவருக்கு சொந்தமான 30 ஆடுகளை கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது கிராமத்தில் வயல்வெளியில் வைத்து  மேய்த்துக் கொண்டிருந்தார். ஆடுகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முனுசாமியை, பெண் உள்ளிட்ட மூவர் ஆட்டோ ஒன்றில் வந்து பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் தேவைப்படுவதாக கூறி கலர் ஜெராக்ஸ் இல் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் போன்ற போலி 2000 ரூபாய் காகிதங்களை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

அவர்களது பேச்சை நம்பி ஆடு மேய்ப்பவர் அவரிடம் இருந்த செம்மறி ஆடுகளை காட்டி 4 ஆடுகளை ரூ.64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். அதற்கான தொகையாக 2000 ரூபாய் தாள்களாக 64 ஆயிரத்தை வழங்கி செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு  சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் ஆடு மேய்ப்பவர் பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று வழங்கியபோது இந்தப் பணம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் தாள்கள் என்று தெரிந்து. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு ரூபாய் நோட்டுகளை வழங்கி செம்மறி ஆடுகளை நூதன முறையில்  ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நூதன முறையில் ஆடு மேய்த்த விவசாயி முனுசாமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் உள்ளிட்ட பலரிடம் ஏமாற்று கைவரிசை காட்டிய கும்பல் ஆந்திர மாநிலம் கேவிபி புரம் காவல் நிலைய போலீசாரிடம் அப்பகுதிக்குச் சென்று ஆடுகளை வாங்க கலர் ஜெராக்ஸ் கள்ள 2000 ரூபாய் பணத்துடன் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டது.

ஆந்திர மாநில போலீசாரின் விசாரணையில் தமிழகத்தில் உள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இவர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, மூவர் மீதும் வழக்கு பதிந்து ஆட்டோவை பறிமுதல் செய்து ஆந்திர மாநிலம் கேவிபி புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)