ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி

 


ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஒரு சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆசை ஆசையாக வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை அந்த பெண் வீடியோவாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விசித்திர சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் தான் நடந்துள்ளது. அங்கு உள்ள பிரபல உணவகம் ஒன்றில் அலிக் பெரெஸ் என்பவர் தனது மகனுக்கு வறுத்த கோழி ஆர்டர் செய்துள்ளார். முதலில் அந்த உணவு பார்ப்பதற்கு வறுத்த கோழி போன்றே இருந்து உள்ளது.

அதன் நிறம், தன்மை அனைத்தும் கோழியை போன்றே இருந்துள்ளது. ஆனால் அதனை தன் மகன் கடித்து சாப்பிட முடியவில்லை. அது கடினமாக இருந்ததால் அதனை கைகளால் பிய்த்து சாப்பிடலாம் என்றாலும் முடியவில்லை. அதனை வெட்டவும் முடியவில்லை. இறுதியாக தான் அது வறுத்த கோழி இல்லை அது ஒரு டவல் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக அந்த பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. எப்படி டவலை வறுத்து அதனை டெலிவரி செய்து உள்ளீர்கள் என்று அவர் மிகவும் காட்டாமாக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பிரபல பாஸ்புட் உணவகம் தனது கிளைகளை தற்காலிகமாக மூடி உள்ளது. விற்பனை நிலையங்களில் இதுப்போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்த வந்த புகாரை அடுத்து பாஸ்புட் உணவகம் கடை ஊழியர்களிடம் விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.