அதிமுகவை பொறுத்தவரை சசிகலா தாய் அல்ல பேய் : முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டம்!!

 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா தாய் அல்லஅவர் ஒரு பேய் என முன்னாள் அமைச்சர் விசுவநாதன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சசிகலாவிடம் யாரும் தொடர்பு வைக்க கூடாது, அவரிடம் யாரும் பேசக்கூடாது, அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது: சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அவர் செயல்பாடு வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான். ஆனால் அருமையான தலைமையில் ஆதிமுக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சசிகலா முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சசிகலாவை ஜெயலலிதாவே நீக்கினார். அதிமுக கட்சி வலிமையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. அதற்கு காரணம் சசிகலா தான்.

ஜெ. நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை நம்பினார். ஆனால் அவர் நம்பிக்கையாக நடக்கவில்லை, துரோகம் தான் செய்தார். ஜெ. இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். சசிகலாவின் உறவினர்கள் தான் கட்சி அதிகாரம் செலுத்தினார்கள். தற்போது கட்சி நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறது.

சசிகலா திமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஜெ. இறப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை தாய் என்று கூறிக் கொள்கிறார். அதிமுகவை பொறுத்தவரை அவர் தாயல்ல ஒரு பேய். இந்த சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள் என்று ஆவேசமாக பேசினார்.

அதிமுகவினர் யாரும் திண்டுக்கல் மாவட்டத்தில் சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில மாயையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மாயயை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக தொண்டர்கள் யாருக்கும் ஒருபோதும் விலை போகமாட்டார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் திமுகவும் தான் என்பது அப்பட்டமான உண்மை. அதிமுக ஆரம்பத்திலிருந்து நீட் தேர்வு எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்