தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொமுச சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொங்கல் உணவு வழங்கும் விழா மின்சார வாரிய தொமுச சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காலை திருப்பூர் பி.என் ரோடு மேட்டுபாளையம் பஸ் நிறுத்தம் எதிரிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில்

கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தொமுச பேரவை கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது

திருப்பூர் மின்சார வாரிய அலுவலக பகுதிகளில் தலைவர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா முன்னிட்டு தொமுச பேரவை கொடியேற்று திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம், வேலம்பாளையம், போயம்பாளையம், பி.என் சாலை, அவினாசி , பெருமாநல்லுர் உட்பட மாவட்ட பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலக பகுதிகளில் தொமுச பேரவை கொடியேற்றுவதாற்கான  விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர்  ஈ.பி.அ.சரவணன் செய்திருந்தார். 

இதன் தொடக்க நிகழ்ச்சியாக திருப்பூர் பி .என் சாலை மேட்டுபாளையம் பஸ் நிறுத்தம் எதிரிலுள்ள  மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட தொமுச பேரவை கொடி கம்பத்தில் கொடி ஏற்றி இனிப்புகள் இனிப்பு வழங்கினார்.

அதனை தொடர்ந்து போயம்பாளையம் ஆர் கே நகர் மின்சார வாரிய பிரிவு அலுவலக பகுதியிலுள்ள தொமுச பேரவை கொடியை செயலாளர் ஈ.பி.அ.சரவணன் ஏற்றி வைத்து தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் சக்கரை பொங்கல் இனிப்பு வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் பெருமாநல்லூர் மின்சார வாரிய தொமுச செந்தில் (எ) பழனிசாமி, சின்னதுரை,  நாகராஜ், ராஜேஷ், உட்பட கழக நிர்வாகிகளும் தொமுச நிர்வாகிகளும் மின்வாரிய தொழிலாளர்களும் கழக தொண்டர்களும் பலரும் கலந்து கொண்டனர்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image