வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது
இராணிப்பேட்டை உட்கோட்ட, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த ஆற்காடு டவுன் சந்தப்பேட்டையை சேர்ந்த முஹம்மத் என்பவரின் மகன் ரஹீம்முல்லாஷெரிப் வயது 25 என்பவர் இவர்ஆற்காட்டில் ரவுடி போல சுற்றி வந்தவர்,டூவீலர் மோகம் கொண்டவர் வேலூரைச் சேர்ந்த பழமையான குற்றவாளி ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அவருடன் இணைந்து ராணிப்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ராணிப்பேட்டை நகர காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவுபடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் பூரணி மேற்பார்வையில் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட குழு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ரஹீம்முல்லா ஷெரிப்பை போலீஸார் மடக்கி விசாரித்த போது வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது இவரிடமிருந்து மூன்று லட்சத்து இருபதாயிரம் மதிப்புள்ள 4 பிளண்டர் பிளஸ், இரண்டு
பஜாஜ் பல்சர் ஆகிய ஆறு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன இவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.- S.ANANTHAN