வெளிநாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசின் நிவாரண உதவித் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்!

 அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான் அவர்களிடம் வக்ஃப் மீட்பு குழு செயல் தலைவர், சமூக ஆர்வலர் காஞ்சி அ அயுப்கான், எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை மனு

தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான் அவர்களை, இன்று (ஜூன்.03) செஞ்சியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரஃபிக் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

1. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் விடுமுறையில் வந்த வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களுக்கு அவர்களின் பணி பாதுகாப்பை கருதி சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு அனுமதி மூலம் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான கால இடைவெளியை 12 வாரத்திலிருந்து குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளதைப் போன்று 4-6 வார குறுகிய கால இடைவெளியில் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

2. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களை வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகள் அனுமதிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வெளிநாடுவாழ் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக, கேரள அரசு வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதல்களை போன்று தமிழக அரசும் வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களுக்காக விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். மேலும், இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திய பிறகு, அவர்களுக்கு பாஸ்போர்ட் எண்ணுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும்

4. வெளிநாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசின் நிவாரண உதவித் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்.

5. காஞ்சிபுரம் பிள்ளையார் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக திண்ணைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மதரசா விற்கு வக்ஃப் போர்டு மீட்டிங்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அடிப்படையில் மதரஸா யே கௌசுல் ஆசம் இடமளித்து உதவி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வாழ் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்

6. வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரிந்து கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து விதமான நிவாரண உதவித் திட்டங்களையும் நீட்டிக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் வேலை செய்யும் வெளிநாடுகளில் அவர்கள் உயிரிழந்தாலும் அவர்களும் தமிழகத்தை சேர்ந்த பெற்றோர்கள் என்ற அடிப்படையில் தமிழக அரசின் இந்த நிவாரண உதவி திட்டத்தை அவர்களின் குழந்தைகளுக்கும் நீட்டிப்புச் செய்ய வேண்டும்.

7. கொரோனா பரவலைத் தடுக்க அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், பள்ளிவாசல் பணியாளர்கள் கடுமையான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே தமிழக அரசு பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், முஅத்தீன்கள் மற்றும் பள்ளிவாசலில் பணிபுரியும்  பணியாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு பாண்டிச்சேரி வக்பு மீட்புக்குழு செயல் தலைவர் சமூக ஆர்வலர் காஞ்சி அஅயுப்கான் மற்றும் SDPI கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்டது.

அனைத்து கோரிக்கைகளையும் பொறுமையுடன் அழகான முறையில் கேட்ட அமைச்சர் செஞ்சி k. மஸ்தான் அவர்கள் தமிழக முதல் அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்து பணிகளை செய்து முடிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்