பாடபுத்தக குடோனில் தீ விபத்து; புத்தகங்கள் மீட்பு

 


திருச்சி மாவட்டம், முசிறி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் இயங்கிவருகிறது. 

இங்கு முசிறி, கரூர் மாவட்டத்திற்குத் தேவையான பாடப் புத்தகங்கள் வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் தற்போது பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதில் தீப்பற்றியுள்ளது. 

இதனையறிந்த பணியாளர்கள், தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துப் பாடப் புத்தகங்களை மீட்டனர்.

கடந்த ஆண்டு வழங்கியது போக எஞ்சியிருந்த புத்தகப் பைகள் மட்டும் அந்தக் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதில், மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் நடப்பாண்டிற்கான புத்தகங்கள் பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.