அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழகம்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தங்கம் சிகாமணி கோரிக்கை


கோவிட்.19 என்கிற கொடிய நோய்க்கு தீர்வு காண சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்த வேண்டும் என்று

 மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குதங்கம் சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

 சித்த மருத்துவ முறையை அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழகத்தின் நிறுவன ிதலைவர்தங்கம்சிகாமணிவெளியிட்டுள்ளஅறிக்கையல்கூறியிருப்பதாவது.

தமிழர் என்று ஒரு இனம் உண்டு அதற்கென்று ஒரு தனிப்பட்ட குணம் உண்டு இந்த இனம் என்பது அதற்கென்ற தனி வரலாறு, அரசியல், நீதி, சமூகம், பாதுகாப்புக்கான மருத்துவம், இப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு மக்களைக் காப்பாற்றுகின்ற மருத்துவமுறை உண்டு,

 அந்த மருத்துவத்தை ஒரு குலம் தனியாக செய்து வந்திருக்கிறார்கள்.

 அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புடையது தான் இந்த சித்த மருத்துவ முறை.

அயோத்திதாசர் பண்டிதர் பெயரில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் உள்ளது என்பதை எல்லோரும் தெரிந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும்  covid-19 என்ற கொடிய நோய் உலக மக்களையே ஆட்டிப்படைக்கிறது அதில் இந்தியாவும் 

தமிழ்நாடும் விதிவிலக்கல்ல ஆகையால் இன்று ஒன்றிய அரசு மருத்துவ ரீதியாக மக்களை காப்பாற்ற முடியாமல் உள்ள நிலையில் மாநில அரசுகளை covid-19 அதற்கான மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் போன்ற பொருள்களை மாநில அரசு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த தமிழ் நாட்டுக்கு சொந்தமான சித்த மருத்துவ முறையை ஏன் ஊக்குவிக்கக் கூடாது .

அவ்வாறு தமிழ்நாட்டில் இருக்கின்ற சித்த மருத்துவ முறையை வளர்த்தெடுப்பதின் காரணமாக உலகநாடுகளுக்கு மருத்துவ உதவியை நம்மால் செய்ய இயலும்.

 எனவே மக்கள் சேவை முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களின் பணிவான வேண்டுதல் இந்த சூழ்நிலையில் தமிழர் சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்தி மக்களை காப்பாற்ற வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்