தடுப்பூசிகொரோனா சான்றிதழுடன் பாஸ்போர்ட் விவரத்தை இணைப்பது எப்படி?

 


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பயணிகளும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை பல நாடுகளும் உறுதி செய்து வருகின்றன. 


இந்தச் சூழலில் மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாடு பயணம் செல்பவர்களுக்கு ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியது. அதன்படி அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் உடன் தங்களுடைய பாஸ்போர் விவரத்தை இணைக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதற்கு பயனாளர்கள் கோவின் தளத்தில் சென்று இணைக்கலாம் என்று தெரிவித்திருந்தது.



இந்நிலையில் கோவின் தளத்தில் எவ்வாறு தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட் விவரத்தை இணைப்பது?

  • பயனாளர்கள்  முதலில் www. cowin.gov.in. என்ற கோவின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 
  • அங்கு சென்று Raise an issue என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதில் உள்ள Add Passport Details என்பதை தேர்வு செய்ய வேண்டும். 
  • அடுத்து வரும் இடத்தில் எந்த நபரின் பாஸ்போர்ட்டை இணைக்க வேண்டும் என்று தேர்வு செய்து அவருடைய பாஸ்போர் எண்ணை கொடுக்க வேண்டும். 
  • இதன்பின்னர் சமர்ப்பித்தால் உடனடியாக பாஸ்போர் எண் உடன் கூடிய புதிய தடுப்பூசி சான்றிதழை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். 
  • இவ்வாறு இணைத்தபிறகு ஒருவேளை பாஸ்போர்ட் அட்டையில் இடம்பெற்றுள்ள பெயரிலும் தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பெயரும் சரியாக இல்லை என்றால் அதனை ஒரு முறை மட்டும் திருத்தம் செய்து கொள்ளலாம். 



    பெயர் மாற்றம் செய்ய:

    • பயனாளர்கள்  முதலில் www. cowin.gov.in. என்ற கோவின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 
    • அங்கு சென்று Raise an issue என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
    • அதில் correction in certificate என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
    • அதன்பிறகு வரும் இடத்தில் எந்த நபரின் விவரத்தை மாற்ற வேண்டும் என்று தேர்வு செய்ய மாற்ற வேண்டிய விவரத்தை அளிக்க வேண்டும். 
    • இதைத் தொடர்ந்து சமர்பித்தால் புதிய விவரங்களுடன் தடுப்பூசி சான்றிதழை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். 
    • பெயர் மாற்றம் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவனமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)