ஊரட‌ங்கு ஆரம்பித்த நாளிலிருந்து மின்சார வாரிய தொமுச சார்பில் செயலாளர் ஈ.பி. அ.சரவணன் தொடர்ந்து மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

 இன்று திருப்பூா் மாநகரம் பி.என் ரோடு போயம்பாளையம் சக்திநகர், கோவில்தோட்டம், திருமூர்த்தி நகர், ஆர் கே நகர், பழனிசாமி நகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவுக்கு சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் வெள்ளிக்கிழ‌மை இன்று முருங்கை ,கத்தரி, கேரட், பீன்ஸ், உருளை, தக்காளி நெய்யுடன் சுவையான சாம்பர் சாதம் தயாரித்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி.அ.சரவணன்,  பெருமாநல்லூா் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்தை சேர்ந்த செந்தில் (எ) பழனிசாமி,  சின்னதுரை,நாகராஜன், ராஜேஷ், மன்மதன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.


கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரட‌ங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக முதல்வர்  மாண்புமிகு தளபதி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 

அதன்படி திருப்பூா் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ்  எம். எல்.ஏ அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டி.கே.டி. மு. நாகராசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் திருப்பூரில் மின்சார வாரிய தொமுச சார்பில் செயலாளர் அ.சரவணன் தொடர்ந்து பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு நிவாரண பணிகளை திருப்பூரில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்