முதலமைச்சர் எண்ணுக்கு வந்த அழைப்பு - அரைமணி நேரத்தில் ஆச்சர்யப்படவைத்த புதுச்சேரி முதல்வர்

 


முதல்வர் மொபைல் எண் எனத் தெரியாமல் உதவிக்கேட்ட நபருக்கு அரை மணிநேரத்தில் அவருக்கு தேவையான உதவியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்துக்கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் செல்போனுக்கு நேற்று மாலை 7 மணிக்கு அழைப்பு ஒன்று வந்தது. முதல்வர் எடுத்து பேசியபோது மறுமுனையில் இருந்தவர் தன்னுடைய உறவினர் புதுச்சேரியில் சிறிய விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கழுத்து பட்டை வாங்கி தந்து உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

முதல்வரும் அவரை சட்டமன்றத்திற்கு வரும்படி கூறினார்.30 நிமிடத்தில் அந்த நபர் சட்டமன்றத்திற்கு வந்தார். அப்போது புறப்பட வெளியே வந்த முதல்வர், சபை காவலர்களிடம் தன்னை தேடி யாராவது வந்தார்களா...? என கேட்க, அவர்கள் உதவி கேட்ட நபரை முதல்வரிடம் அழைத்து வந்தனர். அவரிடம் முதல்வர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கழுத்து பட்டையை கொடுத்தார்.அதனை வாங்கும் போது தான் அந்த நபருக்கு விபரம் தெரிந்தது., தான் அழைத்து உதவி கேட்டது முதல்வர் என அவருக்கு தெரிந்ததும் கண் கலங்கினார்.

அவரிடம் சபை காவலர்கள்,உனக்கு எப்படி முதல்வர் செல்போன் எண் கிடைத்தது என கேட்டதற்கு அவர், புதுச்சேரியில் யாராவது உதவி செய்வார்களா..? என என் கோவையில் உள்ள நண்பரை கேட்டதற்கு அவர் தான் கொடுத்தார். அது முதல்வரின் எண் என தெரியாது என்று அப்பாவியாக கூறி நன்றி தெரிவித்து புறப்பட்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்