பெட்ரோல் பங்க்கில் அராஜகம்; பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகரின் மகன் அதிரடி கைது!

 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் இருந்து காவலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று அதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் பேரூராட்சி செயலாளர் பாண்டியன் என்பவரின் மகன் பாரதி என்ற வாலிபர் குடிபோதையில் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து மேலாளர் நவீன்குமார் என்பவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னார் பெட்ரோல் பங்க்கில் உள்ள அறைக்கு சென்று அங்கிருந்த கண்ணாடி, லேப்டாப், தீயணைப்பு சாதனங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பெட்ரோல் பங்க் மேலாளர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் தப்பியோடிய வாலிபர் பாரதியை தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்தபோலீசார் இன்று கைது செய்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)