கொடுமையின் உச்சம்.. கொடூரமாக உடலில் சூடு வைத்த கணவர் மீது புகாரளித்த மனைவி..

 


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பத்ர அள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், கலைவாணி தம்பதி. ஏழாண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி மர்ம்மான முறையில் இறந்தது கலைவாணிக்கு தெரியவந்தது.

அத்துடன் வேறு ஒரு பெண்ணுடனும் மற்றொரு தொடர்பும் பாண்டியனுக்கு இருந்துள்ளது. வேலைக்கு எங்கும் போகாத பாண்டியன் தினமும் குடித்து விட்டு கலைவாணியை அடித்து துன்புறுத்திவந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்காக கலைவாணி, பாண்டியனின் கொடுமைகளை சகித்துக்கொண்டு இருந்துள்ளார். பாண்டியனுடன் சேர்ந்து கொண்டு அவரின் தந்தை பழனிசாமியும் , தாய் நீலாவும் வரதட்சணை கேட்டு கலைவாணியை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அதனால் கலைவாணி தனது பெற்றோரிடம் தெரிவித்து இரண்டு லட்சரூபாயை வரதட்சணையாக பெற்று கொடுத்துள்ளார். அதன் பிறகும் அடங்காத பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள் கலைவாணியை மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ய தொடங்கியுள்ளனர். கொடுமை தாங்க முடியாத கலைவாணி கடந்த மாதம் ஒருவாரம் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

கடந்த ஜூன் முதல் வாரத்தில் கலைவாணியின் தாய் வீட்டிற்கு சென்ற பாண்யடியன் நான் செய்தது தவறு என்றும், இனி அப்படி நடக்காது என்று தெரிவித்து கலைவாணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார் பாண்டியன்.

மீண்டும் கலைவானியிடம் சண்டை போட தொடங்கிய பாண்டியன் ஒருகட்டத்தில் ஜூஸ் என்று கட்டாயப்படுத்தி மதுவை  குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அறை மயக்கத்தில் இருந்த கலைவாணியை கை,கால்களை கட்டிய பாண்டியன், வாயிலும் துணியை வைத்து திணித்துள்ளார்.

அத்துடன் அடுப்பில் இரும்பு கம்பியை பழுக்க வைத்து கலைவாணியின் இரண்டு கைகள், இரண்டு கைல் மற்றும் தொடை பகுதிகள் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க பகுதிகள் உட்பட பதினாறு இடங்களில் மிருக குணத்துடன் சூடு வைத்துள்ளார்.

சூடு வைத்த நான்கு மணி நேரத்திற்கு பிறகு கலைவாணியின் கட்டுகளை அவிழ்ந்து விட்ட பாண்டியன் இந்த விவகாரத்தை யாரடமாவது சொன்னால் உன்னையும் ,குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் பத்து நாட்களுக்கு மேலாக கலைவாணியை தனி அறையில் அடைத்து வைத்திருந்த பாண்டியன் உணவு கொடுக்காமல் சித்தரவைதை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பதினைந்தாம் தேதி பாண்டியன் வெளியே சென்ற நேரம் பார்த்து தப்பிய கலைவாணி நடந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்து பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனை பிடித்து கொலை மிரட்டல், அடித்து துன்புறுத்தல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும்,கொடுமைக்கு உறுதுணையாக இருந்த மாமனார் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலைவாணி கோரிக்கை முன்வைத்து தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். 

கலைவாணி புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் அவரது மாமனார் மாமியாரிடம் விசாரணையை தொடங்க உள்ளனர். கட்டிய மனைவியை கணவரே சூடுவைத்து கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்