கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பு - நெகிழ்ந்துபோன கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

 


கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் டி குணாளன், கிருஷ்ணராயபுரம் என்ற ஊராட்சி ஒன்றியத்தில் வேங்காம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான கிராம தொடக்கப்பள்ளியின் ஆய்வுக் குறிப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது. 

அந்த கிராம தொடக்கப்பள்ளியின் ஆய்வுக் குறிப்புகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கைப்பட எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1959ம் ஆண்டு குளித்தலை எம்.எல்.ஏ-வாக இருந்த மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது அந்த குறிப்புகளை தனது கைப்பட எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 'இன்று வேங்காம்பட்டி பள்ளியை பார்வையிட்டேன், 2 ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 100 பேரில் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கு என கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போய் இருக்கின்றன அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பயிற்றுவிப்பதாக பொதுமக்கள் பாராட்டினார்கள், நன்று' என்று கலைஞர் கருணாநிதி தனது கைப்பட எழுதியுள்ளார்.

இந்நிலையில் கரூரில் தான் முதன்முதலில் ஆட்சியராக தனது பணியை தொடங்கிய நாளில் ஒரு பொக்கிஷம் தனக்கு கிடைத்துள்ளதாக ஆட்சியர் பிரபு தெரிவித்தார்.  

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)