வெளிப்பக்கம் கதவை பூட்டிய ஹவுஸ் ஓனர்!! கணவனை கொன்ற நிரோஷா கள்ளக்காதலன்

 


சென்னையில் கள்ளக் காதலால் ஏற்பட்ட பிரச்சினையில் கணவனைக் கொன்ற மனைவியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜெயராமன் தெருவில் இன்டீரியர் டெகரேஷன் தொழில்செய்து வருபவர் கோதண்டபாணி(36). இவருக்கு நிரோஷா(30) என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் உள்ளன்ர். இந்த தம்பதிகள் இதற்கு முன் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தபோது அந்த பகுதியில் உள்ள டெய்லர் மணிகண்டன் (30)என்பவருடன் நிரோசாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு சமயம் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்த போது வீட்டின் உரிமையாளர் வெளிப்பக்கம் கதவை பூட்டிவிட்டு, பின் இது குறித்து வீட்டின் உரிமையாளர் நிரோசாவின் கணவர் கோதண்டபாணிக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தம்பதிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இரு பெண் குழந்தைகளின் நலன் கருதி உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீண்டும் சைதாப்பேட்டையில் குடியேறி தம்பதிகள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். கணவர் கோதண்டபானி தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடும் காரணத்தால் சைதாப்பேட்டையிலும் நிரோசா, மணிகண்டன் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. 

இதனை அறிந்த கோதண்டபாணி மனைவி நிரோசாவையும், மணிகண்டனையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சைதாப்பேட்டையிலுள்ள கோதண்டபாணி வீட்டிற்கு வந்த டெய்லர் மணிகண்டன்  இரண்டாவது மாடியில் இருந்த கோதண்டபாணியை கழுத்து பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே கோதண்டபாணி உயிரிழக்க, இது குறித்து தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் கோதண்டபாணியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சந்தேகத்தின் பெயரில் கோதண்டபாணியின்  மனைவி நிரோஷாவை பிடித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள நிரோஷாவின் கல்லக்காதலன் டெய்லர் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்