கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் -சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்

 


ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சாமி, இவர் திமுகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தும், அக்கட்சியின் தலைவர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜூன் 14-ம் கிஷோரை கைது செய்தனர்.

இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு பெண் பத்ரிகையாளர்களின் கண்ணியத்திற்கு களங்கும் விளைவிக்கும் வகையில் அவர்களை அவதூறாக விமர்சித்ததாக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்ட ஒரு சில நாளில் அவர் மீது நடிகை ரோகினி புகார் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு கிஷோர் கே சாமி, அவரது வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் தன்னை பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த தவறான கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டாதாகவும், இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
.
இதனால் கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்