அபுதாபியில் அறிமுகம்-முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா பரிசோதனை.. சில நிமிடங்களில் ரிசல்ட்!

 


கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கொரோனா மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா பரிசோதனையை எளிமையாக்கும் விதமாக அபுதாபியில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபுதாபியை சேர்ந்த இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் தான் இந்த ஃபேஷியல் ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அபுதாபி அரசு இதனை பயன்பாட்டுக்கு கொண்டுள்ளது. அங்குள்ள ஷாப்பிங் மால்களில் இந்த கருவி நேற்று முதல் பயன்பாட்டுக்கு உள்ளது. மால்களுக்கு வரும் மக்கள் இந்த கருவியின் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் முதலில் இந்த கருவியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அங்கு சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90சதவீதம் தொற்றுடையவர்களிடம் இருந்து மிகத்துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஸ்கேனர் எப்படி செயல்படும்

ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்கேனரை பயன்படுத்தலாம். அந்த இ.டி.இ உருவாக்கியுள்ள அப்ளிக்கேஷன் மொபைலில் இருக்க வேண்டும். இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது. நமது உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும். ஒரு கருவியின் உதவியுடன் இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. சோதனை செய்யும் இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் அந்த ரீடர் பொருத்தப்படுகிறது

ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிக்கேஷனை கொண்டு ஒருவரை ஸ்கேன் செய்யலாம். சில வினாடிகளில் முகத்தை ஸ்கேன் செய்துவிடும். ஸ்கேன் செய்யும் நபரிடம் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு மெசேஜ் வந்துவிடும். இதன்மூலம் ஒரு சில நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
கொரோனா தொற்று இல்லை என்றால் பச்சை நிறத்தில் ஒளிரும். தொற்று இருந்தால் சிவப்பு நிறத்தில் ஒளிரும். சிவப்பு நிறம் காட்டிய நபர்கள் 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)