சங்கரன்கோவில் அருகே முன் விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது அரிவாளால் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்தவர் அழகுதுரை.இவருக்கும் அதே பகுதியை சேர்நத கனகராஜ் என்பவருக்கும் இடையே குடும்ப முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அழகுதுரை இருசக்கர வாகனத்தில் சென்ற கனகராஜை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறை வாக உள்ள அழகுதுரையை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் அழகுதுரை, கனகராஜை அரிவாளால் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.