சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு.. சிவகங்கை எஸ்.பி. செந்தில்குமார் நெகிழ்ச்சி பதிவு

 


தமிழ்நாடு டிஜிபியாக உள்ள திரிபாதி இன்றுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது. 

இந்நிலையில், அந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு டிஜிபி-யாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக்கொண்டார். சைலேந்திர பாபு நியமனம் குறித்து சிவகங்கை எஸ்.பி. செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.


அதில், ‘டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் .. சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த காவல் அதிகாரி. எந்த நிலையிலும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத உறுதிமிக்க தலைவர். எந்த பணியிலும் தன்னுடைய தனித்துவத்தை முத்திரை பதிக்கும் அற்புதமான நிர்வாகி. 

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர். இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட சமூக சேவகர்!

அவரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒன்றரை ஆண்டுகாலம் ரயில்வே எஸ்பியாக பணிபுரிந்தது வாழ்வின் உன்னதமான தருணமாகும்.. ரயில்வேயில் அனைத்து மனுக்களையும் ஏற்று கொண்டு FIR பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார். பயணிகளின் பயணம் தடைபடாமல், காவலர்கள், அவர்களுடனே பயணித்து புகார் மனுவை பெற்றுக்கொள்ள செய்தார்.

தெளிவான ஆலோசனைகள், உறுதியான முடிவு, மனம்விட்டு பாராட்டும் மாண்பு! மனிதாபிமானம் மிக்க, பொது மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்! என தரமான அறிவுரைகளை வழங்கி வழி நடத்தும் அற்புதமான தலைவர்

உறுதிமிக்க உடல்திறன், பரந்துபட்ட வாசிப்பு, திறமையான நிர்வாகம், கடுமையான உழைப்பு, அரவணைத்து செல்லும் பாங்கு, பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் தலைமை என சிறந்த மேலாண்மை குணங்களை கொண்ட எங்கள் அன்பிற்குரிய சைலேந்திரபாபு சார், காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்நாடு காவல் துறையையே எழுச்சி பெற செய்யக்கூடிய நல்ல தருணம் ஆகும். 

அவருடைய மகத்தான மக்கள் காவல் பணி சிறந்திட வாழ்த்துக்களும், அவருக்கு இந்த பொறுப்பை வழங்கிய தமிழக அரசுக்கு மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. மேய்ப்பன் எவ்வழியோ, மந்தை அவ்வழி!’ எனப் பதிவிட்டுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்