மதன் என்னும் சைக்கோவுக்கு காவல்துறை ‘செக்’!

 


பப்ஜி, ஃப்ரீ பயர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மன அழுத்தம் வன்மம் உள்ளிட்டவற்றிற்கு தள்ளி விடுவதாக குற்ற சாட்டு எழுந்தது.

இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டாலும், விபிஎன் முறையில் இன்னும் ரகசியமாக இந்த விளையாட்டு புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் எழுகின்ற அதே நேரத்தில் பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீ பயர் எனும் விளையாட்டு அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது.

இந்த விளையாட்டுகளில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறி அதனை வீடியோவாக யூ டியூபில் பதிவிட்டு வருபவர் மதன். முகத்தைக் காட்டாமல் தன்னுடைய குரலை மட்டும் பதிவிட்டு அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் செய்யும் அவர் தலைப்பிலேயே 18+ என்று பதிவிட்டு ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அவரது வீடியோக்கள் அனைத்துமே ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. அதில் தன்னோடு விளையாடும் சக போட்டியாளர்களின் குடும்ப பெண்கள் பற்றி தரக்குறைவாக திட்டுவதே தனது திறமை என நினைத்து அதனை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.

சில நேரங்களை சைக்கோத்தனமாக கத்துவதையும், அதிலும் பெண்களைப் பெற்றி ஆபாசமாக கொடூர வார்த்தைகளில் பேசுவதையும் தனது பழக்கமாக வைத்திருகிறார். இதனாலே சிலர் இவரை சைக்கோ மதன் என விமர்சித்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடன் சாட் செய்யும் பெண்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து ஆபாசமாக வீடியோ கால் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், ஆதரவற்றவர்களுக்கு உதவுதாகக் கூறி போட்டியாளர்களிடமிருந்து நன்கொடையும் வசூலித்து அதனை தன்னுடை சொந்த செலவிற்கு வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மதனை நாளை விசாரணைக்கு ஆஜராகக்கூறி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலக போலிஸார் உத்தரவிட்டுள்ளனர். புகாரின் முகாந்திரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அந்த யூடியூப் பக்கத்தை முடக்கவும் போலிஸார் திட்டமுட்டுள்ளனர்.

இந்நிலையில், பப்ஜி மதன் ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யகோரி #ArrestMadhanOP என்ற ஹேஸ்டேக் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை