போக்சோவில் கைதான ஆசியருக்கு ஆதரவாக. திரண்ட மாணவிகள்! காவல்நிலையம் முற்றுகை

 


மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தங்களது ஆசிரியர் குற்றமற்றவர் என்றும் பொய்யான புகார் என்றும், அவரிடம் உடற்கல்வி பயிற்சி மேற்கொண்ட மாணவ மாணவியர் ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றகையிட்டனர்.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி, செட்டிநாடு வித்யாஸ்ரமம், மகரிஷி பள்ளி, செயின் ஜார்ஜ் ஆங்கிலே இந்தியன் பள்ளி உள்பட பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் சீண்டல் புகார்கள் எழுந்து வருகின்றன.


இது தொடர்பாக தீவிரமான விசாரணைகளை பள்ளி கல்வித்துறையும். காவல்துறையும் ஆரம்பித்துள்ளது. இரண்டு ஆசியர்கள் இதுவரை இந்த புகார்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள்,

இந்நிலையில் மயிலாடுதுறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 100 ஆண்டுகளை கடந்த டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்கே உடற்கல்வி ஆசிரியராகப் அண்ணாதுரை என்பவர் பணியாற்றுகிறார்


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு படித்த ஒரு மாணவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அந்த பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை மீது புகார் கொடுத்தார்.

இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரிடம் உடற்கல்வி பயிற்சி மேற்கொண்ட மாணவ மாணவியர் ஏராளமானோர், அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர் தங்களது ஆசிரியர் குற்றமற்றவர் என்று கூறினர்.

தங்களையும் காவல்துறை விசாரணை செய்து உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மாணவ மாணவிகள் கூட்டம் அதிகரிப்பது தொடர்ந்து அதிரடிப்படை காவல்துறையினர் அங்கு வந்து ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட மாணவ-மாணவிகளை கலைந்து போகச் செய்தனர்.