கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் 30 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராமசாமி கோவில் அருகிலுள்ள திமுக நகர அலுவலகத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து 30 திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான மளிகை அரிசி உள்ளிட்ட பொருட்களை மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் அரசு தலைமை கொறடா கோவி செழியன் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நகர செயலாளர் சு ப தமிழ்ழகன் ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 30 திருநங்கைகளுக்கு 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.